பதவியேற்ற மறுநாளே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகல்? நடிகர் சுரேஷ் கோபி அதிர்ச்சி முடிவு..

  • IndiaGlitz, [Monday,June 10 2024]

நேற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று திடீரென அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து பிரதமர் மோடி உள்பட 72 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.

இந்த நிலையில் கேரளாவின் முதல் பாஜக எம்பி என்ற பெருமையை பெற்ற நடிகர் சுரேஷ் கோபி, நேற்று இணை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் இன்று அவர் திடீரென அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்படங்களில் நடிக்க இடையூறாக இருக்கும் என்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியுள்ள சுரேஷ் கோபி தனது முடிவை தலைமை இடம் சொல்லிவிட்டதாகவும், என்னை அமைச்சர் பொறுப்பிலிருந்து தலைமை விடுவிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு மத்திய அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இன்று திடீரென நடிகர் சுரேஷ் கோபி அமைச்சர் பதவி வேண்டாம் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.