நேற்று பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்பி இன்று மரணம்
- IndiaGlitz, [Wednesday,February 01 2017]
நேற்று பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது கேரள எம்பி அகமது என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் நாடாளுமன்றம் அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்ததை அடுத்து நேற்று அவர் மீண்டும் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அகமது உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அகமது உடல் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இன்று அவரது உடல் சொந்த மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அகமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.