எதிராக வரலாம் என நினைத்து அடக்க முயல்கிறார்கள்..! நடிகர் விஜய்க்கு ஆதரவளிக்கும் கேரளா எம்.எல்.ஏ.

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

எதிர்ப்புக் குரல்கள் அடக்கப்படுகின்றன என்று விஜய்க்கு ஆதரவாக கேரள எம்எல்ஏ பதிவிட்டுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 5) காலையிலிருந்து 'பிகில்' படம் சம்பந்தப்பட்ட அனைவரின் வீட்டிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்தச் சோதனை பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, விஜய் வீடு என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் விஜய் இருக்கும்போது, அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து விஜய் வீடு, அலுவலகம் எனத் தொடங்கிய சோதனை தற்போது வரை முடியவில்லை.

இந்தச் சோதனை தொடர்பாக பல்வேறு கருத்துகள் உலகி வருகின்றன. ட்விட்டர் தளத்தில் #WeStandWithVijay என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே அரசியல் வட்டாரத்தில் முதல் நபராக விஜய்க்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார் கேரள எம்எல்ஏ.

கேரளாவில் உள்ள நிலாம்பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.வி.அன்வர். இவர் தனது ஃபேஸ்புக் பதிவில், வரலாற்றைப் புரட்டிப் போடும், எதிர்க் குரல்கள் அடக்கப்படுகின்றன. நிலைப்பாடுகளை அறிவித்த நாள் முதல் அவர்கள் வேட்டையாடத் தொடங்கினர். 'மெர்சல்' திரைப்படம் திராவிட மண்ணில் பாஜகவின் வளர்ச்சிக்குத் தடையானது என்பது தெளிவு. சி.ஜோசப் விஜய்க்கு என் ஆதரவு” என்று தெரிவித்துள்ளார்.

 

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' டைட்டில் வின்னர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர் ஒன்றை இன்று இயக்குனர் பா ரஞ்சித்

காதலிக்கவில்லை என்றால் இறந்துவிடுவேன்.. வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கு போட்ட இளைஞர்.

"சம்பவத்தன்று அந்தப் பெண்ணுக்கு வீடியோ காலில் பேசிய படியே ஜோனாதன் தூக்குப் போட்டுள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியுள்ளோம். வீடியோ கால் தொடர்பாகவும் விசாரித்துவருகிறோம்"

விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை: வருமான வரித்துறை விளக்கம்

பிகில் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் பிகில் படத்தில் நடித்த நடிகரான விஜய் ஆகியோர் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில்

சீனாவில் பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று – எப்படி பரவியது என மருத்துவர்கள் குழப்பம்

சீனாவில், பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு ஊடகம் XinhuaNet உறுதி செய்துள்ளது.

ரூ.132 கோடி.. உலகின் காஸ்ட்லி சூப்பர் கார்.. கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முன்னாள் தலைவரான பெர்டினாண்ட் பைச் இந்த காரை வாங்கியிருப்பதாக முதலில் கூறப்பட்டது. இது தொடக்கத்தில் வந்த தகவல் ஆகும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் வேறு விதமாக உள்ளது.