விஜய்யால் மட்டுமே இதெல்லாம் முடியும்: ஒரு எம்.எல்.ஏவின் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருவர் இந்த அளவிற்கு பொது மக்களிடம் புகழ் பெற முடியுமென்றால் அது விஜய்யால் மட்டுமே முடியும் என எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூஞ்சூர் என்ற பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜார்ஜ் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது விஜய் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசினார்.
தனது சிறு வயதில் தமிழ் படங்களை மட்டுமே பார்த்ததாகவும், ஆனால் தற்போது விஜய்யின் படங்களை மட்டுமே தொலைக்காட்சியில் பார்ப்பதாக கூறி அவர், ஒருமுறை விஜய் ரசிகர் சங்கத்தில் இருந்து தன்னை ஒரு விழாவுக்கு அழைத்து சென்றார்கள் என்றும், அந்த விழாவில்தான் கலந்து கொண்டபோது தான் விஜய்க்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரசிகர்களாக இருப்பது தனக்கு தெரியும் ஜார்ஜ் எம்.எல்.ஏ கூறினார்.
மேலும் ஒருவரால் இந்த அளவுக்கு பொது மக்களை கவர்ந்து இழுக்க முடியுமா? என்று தனக்கு ஆச்சரியம் ஏற்பட்டதாகவும் இதை எல்லோராலும் செய்ய முடியாது என்றும் விஜய் போன்ற மனிதர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்றும் அந்தப் பேட்டியில் அவர் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தான் விஜய் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள விரும்பியதாகவும் அதில் இருந்து ’விஜய் ஒரு சிறந்த மனிதர் மட்டுமின்றி சிறந்த சமூக சேவகர், இரக்க குணமுள்ளவர், தனது ரசிகர்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் உடனே அதை தீர்த்து வைப்பவர், சொந்தப் பணத்தில் சமூக சேவை செய்பவர் போன்றவற்றை அறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
நல்ல நடிகரான விஜய்யை கடவுள் எப்போதும் ஆசீர்வதிப்பார் என்று அவர் கூறியது விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments