கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்....! ஏன் தெரியுமா..!
- IndiaGlitz, [Monday,May 24 2021]
கேரள சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழில் எம்எல்ஏ-வாக பதவியேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் CPI (மார்க்சிஸ்ட்) கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க, தற்காலிக சபாநாயகர் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் சுவாரசிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தேவிக்குளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக களமிறங்கி வெற்றிபெற்றவர் ராஜா என்பவர். இவர் பதவியேற்றபோது தமிழ் மொழியில் கூறி பதவியேற்றுக்கொண்டுள்ளார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வழக்கறிஞரான ராஜா(36), கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று முடித்துள்ளார். இவர் முதன்முதலாக கேரள சட்டப்பேரவையில், எம்எல்ஏ-வாக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.