இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது: மம்முட்டி, கமல், விஜய் குறித்து கேரள அமைச்சர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த திரைப்படம் திடீரென தற்போது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் மம்முட்டிக்கு ஆதரவாக கேரள அமைச்சர் ’இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது’ என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மம்முட்டி நடித்த ’பழு’ என்ற திரைப்படத்தில் பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு கேரக்டரில் அவர் நடித்திருப்பார் என்பதும் அவரது சகோதரி தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில், சாதிய மனநிலையிலிருந்து வெளியே வர முடியாமலும், அதே நேரத்தில் தங்கையின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் அவர் தனது தங்கை கணவரை கொலை செய்து சாதிய ஆதிக்க மனநிலையை நிலைப்படுத்தி இருப்பதாக அந்த படம் முடிக்கப்பட்டிருக்கும்.
இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது திடீரென இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மம்முட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக கூறி சமூக வலைதளத்தில் அவருக்கு எதிரான ஹேஷ்டேக் பரவி வருகிறது.
இந்த நிலையில் மம்முட்டிக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் வாசுதேவன் குட்டி தனது சமூக வலைத்தளத்தில் மம்முட்டிக்கு ஆதரவாக தெரிவித்துள்ளார். மம்முட்டியை முகமது குட்டி என்றும், கமல்ஹாசனை கமாலுதீன் என்றும், விஜய்யை ஜோசப் விஜய் என்றும் சிலர் அழைக்கின்றனர், இதுதான் மதவாதிகளின் அரசியல், இது கேரளா மண், முற்றிலும் வேறுபட்டது, அவர்களுடைய மதவாத அரசியலுக்கு இங்கு இடம் இல்லை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com