விமான பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை கழட்டி காட்டிய வாலிபர் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
சவுதியில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் விமான பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் ஒருவர் தனது பேண்ட் ஜிப்பை கழட்டி அசிங்கமாக நடந்து கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதியில் எலக்ட்ரீஷியன் பணி செய்து வரும் அப்துல் ஷாஹித் என்பவர் விடுமுறைக்காக இந்தியா திரும்ப சவுதி ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சிகரெட் பற்ற வைக்க முயற்சித்தார். இதனை கவனித்த விமான பணிப்பெண் விமானத்திற்குள் புகை பிடிக்க அனுமதி இல்லை என எச்சரித்தார்.
இதனையடுத்து விமான பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த அப்துல், ஒரு கட்டத்தில் திடீரென தனது பேண்ட் ஜிப்பை கழட்டி அசிங்கமாக நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விமான பணிப்பெண் உடனடியாக சக ஊழியர்களிடம் நடந்ததை கூறினார்.
இந்த நிலையில் விமானம் டெல்லி இறங்கியவுடன் இதுகுறித்து விமான பணிப்பெண் செய்த புகாரை அடுத்து அப்துலை கைது செய்த போலீசார் அவர் மீது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், தரக்குறைவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பல ஆண்டுகள் கழித்து விடுமுறையில் வீடு திரும்பிய அப்துல் வீட்டிற்கு செல்ல முடியாமல் சிறைக்கு சென்றது அவரது குடும்பத்தினர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments