ஹார்லிக்ஸில் விஷம்… மனைவியின் பலே திட்டத்தால் பதறிப்போன கணவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹார்லிக்ஸில் விஷம் வைத்து, தனது மனைவியே தன்னைக் கொலை செய்யப் பார்த்தார் என்று கேரளாவைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே இளம்பெண் ஒருவர் தனது காதலனை ஜுஸில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து அதே பகுதியில் இந்தப் புகார் எழுந்துள்ளதால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலை அடுத்த முறியங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர்(49). கேரளப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது மனைவியே (பிரியா) தனக்கு ஹார்லிக்ஸில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்தார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவத்தை, நான் ஆதாரத்துடன் பாறசாலை காவல் நிலையத்திற்குச் சென்று கூறினேன். ஆனால் அவர்கள் புகாராகப் பதிவுசெய்ய முன்வரவில்லை என்றும் ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறித் தற்போது பரபப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சுதீர், திருமணத்திற்குப் பிறகு தனது வீட்டில் உணவு சாப்பிடும்போதெல்லாம் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது வீட்டிற்குச் சென்ற சுதீர் மனைவி கொடுத்த ஹார்லிக்ஸை குடித்ததாகவும் பின்னர் தலைவலி, மயக்கம் ஏற்பட்டு பாறசாலை பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொணடதாகவும் அதுவும் பலனளிக்காமல் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் வென்டிலேட்டரில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் குணமாகி வீடு திரும்பிய சுதீருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி பிரியா தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பிரியாவின் துணிகளை அவர் அப்புறப்படுத்தியபோது துணிகளுக்கு இடையில் அம்மோனியம் பாஸ்பேட் வைக்கப்பட்ட பாட்டில் ஒன்றையும் கூடவே சிரஞ்சி ஒன்றையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது மனைவி தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அது பலனளிக்காமல் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் சுதீர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட போது தனது உடலில் அம்மோனியம் பாஸ்பேட் விஷம் கலந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள் என்றும் இந்த அம்மோனியம் பாஸ்பேட் பாட்டிலை தனது மனைவியின் ஆண் நண்பர் ஒருவர்தான் ஏஐபி கொரியர் மூலமாக அவருக்கு கொடுத்தார் என்றும் ஆதாரத்தைத் தற்போது வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் கேரள எல்லையில் இளம்பெண் ஒருவர் தனது காதலலை ஜுஸில் விஷம் வைத்து கொன்ற சம்பவத்தை அடுத்து ஹார்லிக்ஸில் விஷம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments