ஊரடங்கு நேரத்தில் அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓடிப்போன வாலிபர்
- IndiaGlitz, [Thursday,May 21 2020]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் பணி செய்து கொண்டிருந்தவர்கள் வேலையும் இல்லாமல் தங்குவதற்கு இடமில்லாமல் உணவும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கேரளாவில் மூணாறு பகுதியைசேர்ந்த ஒருவர் எர்ணாகுளம் பகுதியில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு காரணமாக தங்குவதற்கு இடமும் இன்றி சாப்பாடும் இன்றி தவித்துள்ளார். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் தனது பால்ய கால நண்பர் ஒருவர் இருப்பதை கேள்விப்பட்டு அவருடைய உறவினர்களிடம் போன் செய்து நண்பரின் தொலைபேசி எண்ணை வாங்கி உள்ளார். அதன்பிறகு நண்பருக்கு போன் செய்து தான் ஊரடங்கு காரணமாக கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யும்படியும் கேட்டுள்ளார்.
உடனடியாக அந்த வாலிபரின் நண்பர் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து உணவு மற்றும் இருப்பிடம் கொடுத்து உதவியுள்ளார் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவர் தனது நண்பரை வீட்டில் வைத்து தங்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் மூணாறு பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நண்பர் அந்த வாலிபரிடம் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் நண்பரின் வீட்டிலேயே தங்கியிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த வாலிபரும் ஓடிப் போய் விட்டதை பார்த்து நண்பர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் அந்த நண்பர் மற்றும் அவருடன் ஓடிப்போன மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் தனது புதிய காதலருடன் தான் செல்வேன் என்றும், குழந்தைகளும் தன்னுடன் தான் இருப்பார்கள் என்றும் கூறினார். போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அந்த பெண் கேட்காமல் காதலனுடன் சென்று விட்டார்.
மேலும் அந்த பெண் தனது பெயரில் தனது கணவர் வாங்கி கொடுத்த காரையும் தன்னுடைய நகைகளையும் எடுத்துக்கொண்டு காதலருடன் குழந்தைகளுடன் சென்றுவிட்டார். ஊரடங்கு நேரத்தில் நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்யப் போக, தற்போது அந்த நண்பர் மனைவி குழந்தைகளை இழந்து பரிதாபமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.