கொரோனாவுக்கு கோயில் கட்டிய பக்தர்... ஆனால் யாருக்கும் அனுமதி இல்லையாம்!!!

கொரோனா உலகத்தையே புரட்டிப் போட்டு அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை சாந்தப்படுத்தும் விதமாக சில பக்தர்கள் அதற்கு பூஜையும் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சள் குங்குமத்தோடு ஆற்றங்கரைகளில் பெண்கள் எல்லாம் ஒன்றுகூடி கொரோனா தேவிக்கு பூஜை நடத்தினர். இந்தச் சடங்கு அசாம் மாநிலத்தின் பிஸ்வந்த பூர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. தற்போது கொரோனாவின் தீவிர பக்தர் ஒருவர் கேரளாவில் கோயிலையே கட்டியிருக்கிறார். தான் கட்டியக் கோவிலில் யாரையும் தரிசனம் செய்யவும் அவர் அனுமதிப்பதில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவின் கடக்கல் பகுதியை சேர்ந்த அனிலன் என்பவர்தான் தனது வீட்டிற்கு அருகில் “கொரோனா தேவி” க்கு புதிய கோயிலைக் கட்டி இருக்கிறார். கொரோனா வைரஸ் உலகில் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மாதிரியே இந்தச் சிலையில் கோரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே தென்னிந்திய கிராமங்களில் அம்மை போன்ற நோய்களை, பெண் தெய்வத்தின் வடிவமாகக் கருதும் நம்பிக்கை இருந்து வருகிறது. அதுபோல கொரோனா வைரஸ் என்கிற கொள்ளை நோயும் தற்போது ஒரு தெய்வத்தின் வடிவமாக மாற்றியிருக்கிறார் அனிலன்.

கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தபோது, அதிர்ச்சியடைந்த சில பெற்றோர்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனா, லாக்டவுன் போன்ற பெயர்களை சூட்டினர். அடுத்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைச் சாந்தப்படுத்த பூஜையும் நடத்தப்பட்டது. இப்போது கோவிலும் கட்டப்பட்டு விட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அனிலன் இந்த கோவிலில் யாருக்கும் தரிசனம் கிடையாது. கொரோனா நேரத்தில் மற்றவர்களுக்கு உதவுபவர்களின் பெயரில் பூஜை நடத்தப்படும். பிரசாதம், பூஜை ஆகியவற்றிற்கு பணம் வாங்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். கொரோனா தேவிக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு உதவி செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கும் அனிலனுக்கு சிலர் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

More News

பிரபல நடிகரை மணக்கும் பேட்மிண்டன் வீராஙகனை!

விளையாட்டு துறையை சேர்ந்தவர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் காதலித்து திருமணம் செய்த பல உதாரணங்கள் இருக்கும் நிலையில் தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஒருவர் நடிகர்

விக்ரம், இலியானா, ஹாரீஸ் ஜெயராஜ் படத்தில் திடீரென சூர்யா வந்தது எப்படி?

சியான் விக்ரம் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக இலியானாவும் அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவும் முடிவு செய்து இருந்த நிலையில் திடீரென இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக

மேலும் ஒரு தமிழக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல் 

கொரோனோ வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை, பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை ஜாதி மத இன வேறுபாடின்றி தாக்கி வருகிறது என்று தெரிந்ததே.

கொரோனா சிகிச்சை மருந்து: கல்லாக்கட்டும் ரஷ்யா!!!

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இதுவரை முறையான மருந்துகள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எனக்கு பிடிக்காத பாடல்: மனம் திறந்த கமல்ஹாசன்

நேற்று உலக நாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆன்லைன் மூலம் உரையாடினர் என்பதும் இந்த உரையாடலில் ரசிகர்கள் அறியாத பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே