திருமணமான பெண்களை குறிவைத்து 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்!

சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களை குறிவைத்து அவர்களது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த 25 வயது பிரதீஷ்குமார் என்பவர் சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்ணின் கணவரிடம் முதலில் பெண் குரலில் பேசி அதனை ரிகார்ட் செய்து, பின்னர் அந்த உரையாடலை அவருடைய மனைவிக்கு அனுப்புவார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும். இதனை பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் அவரிடம் பழகி, பின்னர் அவரிடம் ஒரு கட்டத்தில் வீடியோகால் செய்து பேசுவார்.

இந்த வீடியோகாலை பதிவு செய்து அதில் ஆபாச பெண்களின் உடல்களை மார்பிங் செய்து அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறும் இல்லையேல் அந்த ஆபாச வீடியோவை அவரது கணவருக்கு அனுப்புவதாகவும் மிரட்டி தனது காரியத்தை சாதித்து கொள்வார். இதேபோல் சுமார் 50 பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் ஒரு பெண் தைரியமாக போலீசில் புகார் கொடுக்க, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மார்பிங் செய்யப்பட்ட ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
 

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அழகிய தீர்வு: மத்திய அரசின் மாற்று முடிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு!

இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்க புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

பிறந்த நாளில் இசைஞானி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதுதான்!

இளையராஜா நேற்று தனது 76வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். கமல்ஹாசன் உள்பட பல பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

இந்தி எதிர்ப்பை புத்திசாலித்தனமான புரமோஷனில் காட்டிய 'கொரில்லா' படக்குழு

தேர்தல் முடிந்துவிட்டதால் அரசியல்வாதிகளுக்கு போராட்டம் செய்யவும், அறிக்கை விடவும் காரணம் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு கைகொடுத்த விவகாரம் தான்

இந்தி எதிர்ப்பை வித்தியாசமாக தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.