முதியோர் இல்லத்தில் காதல்: 65 வயது மணமகளை மணந்த 66 வயது மணமகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்திலுள்ள திருச்சூரில் 66 வயது முதியவர் ஒருவருக்கு 65 வயது முதிய பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்ததால் இருவருக்கும் அந்த இல்லத்தை சேர்ந்தவர்கள் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் என்ற 65 வயது பெண்ணின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார். அதன் பின்னர் அவர் சில நாட்கள் உறவினர்கள் வீட்டில் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் கோசானியன் மேனன் என்பவரும் அதே முதியோர் இல்லத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சேர்ந்தார். லட்சுமி அம்மாளின் கணவரிடம் கோசானியன் உதவியாளராக இருந்தவர் என்பதால் அவருடன் முதலில் நட்பு முறையில் பழகிய லட்சுமி அம்மாளுக்கு பின்னர் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டதை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் முதியோர் இல்லம் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட முதியோர் இல்ல நிர்வாகிகள் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Marriage ceremony; Kochaniyan Menon, 66, and Lakshmi Ammal, 65, the couple, who met and fell in love at the old age home in Thrissur, got married on Saturday. #Kerala #oldage #home #LoveStory @NewIndianXpress pic.twitter.com/BbNUbCE7te
— P Ramdas (@PRamdas_TNIE) December 28, 2019
Finally they tied the knot..!! A couple in their 60s fell in love in an old age home in #Thrissur and got married today. #Kerala #wedding @NewIndianXpress pic.twitter.com/yY7OiFgdNz
— P Ramdas (@PRamdas_TNIE) December 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments