காதலுக்கு கண்ணில்லை...!10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலியை சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக தனது ரூம்-மில் மறைத்து வைத்திருந்த, இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அய்லூர் என்ற கிராமத்தை சார்ந்தவர் ரஹ்மான் என்ற இளைஞர். எலக்டீரிசியன் வேலை செய்யும் இவரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சஜிதாவும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், தன்னுடைய வீட்டிலேயே மறைத்து வாழ வைக்கலாம் என முடிவு செய்தார். இதையடுத்து இந்த விஷயத்தை காதலியிடம் கூறியதில், அவரும் சரி என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்ற 10 வருடங்களுக்கு முன்பு சுஜிதா காணாமல் போனதை தொடர்ந்து, அவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் இளம்பெண்ணை ஒருபுறம் தேடி வந்துள்ளனர். ஆனால் சுஜிதா சத்தமில்லாமல், காதலர் உருவாக்கியுள்ள ரகசிய அறையில் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
தீராக் காதலன் ரஹ்மான் காதலிக்காக தன்னுடைய அறையில் டெக்னிக்கலான வேலைப்பாடுகளை செய்துள்ளார். சுவிட்ச் அழுத்தினால் அறைக்கதவு பூட்டுமாறும், அறைக்கதவை யாரவது திறந்தால் ஷாக் அடிக்குமாறும் உருவாக்கியுள்ளார். தொலைக்காட்சி சத்தம் கேட்காமல் இருக்க இயர் போன், வெளியில் இருந்து அறையை பார்க்க தெரியாத அளவிற்கு துவாரம், ஜன்னல் கம்பியை நீக்கிவிட்டு உள்ளிருந்து திறக்கும் வகையில் பலகை உள்ளிட்டவற்றை கட்சிதமாக செய்துள்ளார். ஜன்னல் எடுத்துவிட்டு அதன்வழியாக சஜிதா வெளியில் வந்து குளிப்பது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த காதல் ஜோடி, வீட்டைவிட்டு வெளியேறியுள்ளது. வீட்டிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள, வித்தனாசேரி என்ற ஊரில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து ரஹ்மானை காணவில்லை என்று, அவர்கள் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதன்பின்பு சில நாட்கள் கழித்து, ரஹ்மானை பார்த்துள்ளார் அவரது தம்பி. எங்க திடீர்னு காணாமல் போய்ட்ட ...? என்று கேட்ட போது தான், அவருக்கு மொத்த கதையும் தெரியவந்துள்ளது. இதன்பின் பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரிய வர, அவர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
10 வருடங்களுக்கு பின் தங்கள் மகளை பார்த்த பெற்றோர்கள், கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அவர்களிடம் காதல் குறித்து கேட்டபோது ரஹ்மான் கூறியதாவது,"காதலுக்காக தான் இப்படி செய்தேன். நானும் மதம் மாறவில்லை, அவரையும் மதம் மாற்ற சொல்லவில்லை. எங்களுடைய காதல் ஜாதி, மதத்தை தாண்டியது" என்று கூறியுள்ளார். தற்போது காவல் துறையினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த காதல் ஜோடிக்கு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் பரிசாக கொடுத்து உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments