'காலா' படம் பார்க்க சம்பளத்துடன் விடுமுறை அளித்த தனியார் நிறுவனம்

  • IndiaGlitz, [Wednesday,June 06 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 'கபாலி' படத்திற்கு பின்னர் மீண்டும் அதே கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்று முடிந்துவிட்டது. அதேபோல் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் 'காலா' படத்தின் முதல் நாள் டிக்கெட்டுக்கள் விற்று முடிந்துவிட்டது

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் 'காலா' படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 30 ஊழியர்களில் பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள் என்பதால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் விடுமுறை அளித்ததாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 'கபாலி' படம் வெளிவந்தபோதும் சென்னையில் உள்ள ஒருசில தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது

More News

சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்த காட்சி: வைரலாகும் வீடியோ

மும்பையில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறிய சிசிடிவி வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் 10 பெண்கள்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காத நிலையில் புதியதாக பொறுப்பேற்ற பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கினார்.

சென்னையில் இளைஞர் கொலை: மலேசிய கள்ளக்காதலி காரணமா?

சென்னையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் தகாத உறவு வைத்திருந்த மலேசிய பெண் இந்த கொலைக்கு காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

'காலா' படம் குறித்து கன்னட அமைப்புகளுடன் பேச தயார்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை வரவேற்க தற்போது ரஜினி ரசிகர்கள் தயாராக இருக்கும்

மகனை போல் எங்கள் வேதனையில் பங்கெடுத்தார்: விஜய் குறித்து தூத்துகுடி பெண்

தளபதி விஜய் நேற்று நள்ளிரவு தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலியானவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்.