கேரளாவிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்: எஸ்.ஆர் பிரபு அறிவுரை

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டது. அதன்பின் கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக முதலிடத்தில் இருந்தது

ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் உலக சுகாதார துறையினர் பரிந்துரை செய்த வழிகாட்டுதலின்படி கேரளா எடுத்த சில முயற்சிகள் ஆகியவை நல்ல பயன்களை கொடுத்தது. மேலும் ஊரடங்கு உத்தரவுக்கு கேரள மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனை அடுத்து தற்போது கேரளா கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது

இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட மாநிலமாக இருந்த கேரளா, தற்போது பத்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் தற்போது 173 கொரோனா வைரஸ் நோயாளிகள் மட்டுமே உள்ளனர் என்பதும் அவர்களும் மிக வேகமாக குணமடைந்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் கேரளா, கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து குறிப்பிட்டு கேரளாவை பின்பற்றி அனைத்து மாநிலங்களும் கொரோனாவுக்கு எதிரான தக்க நடவடிக்கைளை தங்கள் மாநிலங்களில் எடுக்க வேண்டும் என்றும் என்றும் கூறியுள்ளார்

தற்போது 2,654 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்பதும் அதனை அடுத்து டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கேரள அரசிடம் உரிய அறிவுரைகளை பெற்று தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது