ஸ்பை வேலை பார்த்த போக்குவரத்து கேமரா… கணவன், மனைவியிடம் மாட்டிய தரமான சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாலையில் பொருத்தப்பட்டு இருந்த போக்குரத்துத் துறை கேமரா ஒன்று எடுத்த புகைப்படத்தால் தற்போது ஒரு கணவன் மனைவிக்குள் பூகம்பகம் ஏற்பட்டு இருக்கும் சம்பவம் கேரளாவில் பேசுபொருளாகி இருக்கிறது.
சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு கேரளாவில் பாதுகாப்பான கேரளா எனும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் ஊழல் நடவடிக்கைகள் நடைபெற்று இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருக்கும் இந்த வேளையில் தற்போது போக்குவரத்துத் துறை கேமரா செய்த ஒரு வேலையால், ஒரு தம்பதிகளுக்குள்ளும் பிரச்சனை வெடித்திருக்கிறது.
கேரளாவின் கரமனா பகுதியில் வசித்துவரும் 32 வயதான இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அவர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது வேறொரு பெண்ணுடன் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில் அதை சென்சார் கேமரா புகைப்படமாக எடுத்திருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அந்த வாகனத்தின் சொந்தக்காரருக்கு அபராதம் செலுத்தும்படி போக்குரத்துத் துறையில் இருந்து குறுஞ்செய்தியுடன் ஆதாரத்திற்காக இந்த புகைப்படமும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்தப் புகைப்படத்தில் வேறொரு பெண் இருப்பதைப் பார்த்த இளைஞரின் மனைவி இதுகுறித்து கணவனிடம் விசாரித்து இருக்கிறார். முதலில் அந்தப் பெண் யாரென்றே தெரியாது என கணவன் சமாளித்திருக்கிறார். ஆனால் அதை நம்பாத மனைவி தொடர்ந்து கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் கோபமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த மனைவி தற்போது கரமனா காவல் துறையில் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்காக சென்சார் கேமரா எடுத்த ஒரு புகைப்படத்தால் குடும்பத்திற்குள் சச்சரவு ஏற்பட்டு தற்போது கைது வரை சென்றிருக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout