நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆன்லைன் விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் சமீபத்தில் கூட கோவையைச் சேர்ந்த ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டை இளைஞர்கள் பலர் விளையாடி வருகின்றனர் என்பதும் லட்சக்கணக்கில் அவர்கள் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இந்த விளையாட்டிற்கு தூதர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை பாலி வடக்கன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதுகுறித்து கேரள அரசு உடன் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது
அதுமட்டுமின்றி இந்த விளையாட்டின் தூதர்களாக இருக்கும் நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது
ஆன்லைன் விளையாட்டு வழக்கில் நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments