ஏசி பேருந்துகளை டிசைன் செய்யும் பொறுப்பு.. பிரபல கலை இயக்குனரிடம் ஒப்படைத்த அரசு..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் உருவான திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்த பிரபலம் ஒருவருக்கு ஏசி பேருந்துகளை டிசைன் செய்யும் பொறுப்பை அரசு ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகில் கமல்ஹாசன் நடித்த ’கலைஞன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் சாபு சிரில். இதனை அடுத்து அவர் ’புதிய முகம்’ ’பாசமலர்கள்’ ’கன்னத்தில் முத்தமிட்டால்’ ’சிட்டிசன்’ உள்பட பல திரைப்படங்களுக்கு இவர் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஷங்கர் இயக்கிய ’அந்நியன்’ ’எந்திரன்’ போன்ற படங்களுக்கும், ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ உள்பட சில படங்களுக்கும் இவர் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

மேலும் தெலுங்கில் உருவான பிரம்மாண்டமான திரைப்படங்களான ’பாகுபலி’ ’பாகுபலி 2’ ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கும் இவர்தான் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ 2010 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’எந்திரன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல கலை இயக்குனரான சாபு சிரில் அவர்களிடம் கேரள போக்குவரத்து கழகம் புதிய ஏசி பேருந்தை டிசைன் செய்யும் பணியை ஒப்படைத்துள்ளது. தொலைதூர பயணத்திற்கான பத்து ஏசி சூப்பர் பாஸ்ட் பேருந்துகளை கேரள போக்குவரத்து கழகம், ஓணம் பண்டிகைக்காக வாங்க உள்ள நிலையில் இந்த பேருந்துகளை டிசைன் செய்யும் பொறுப்பு சாபு சிரில் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.