கொரோனா.. பள்ளி விடுமுறையானாலும் மதிய உணவு வீடுகளுக்குச் செல்லும்..! கலக்கும் கேரள கம்யூனிஸ அரசு.
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா உட்பட 123 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலுமுள்ளது. இந்தியாவில் இதுவரை 75 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இந்த எண்ணிக்கையானது 17 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் உள்ள கம்யூனிஸ்ட் அரசானது பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31வரை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 150 கொடியை ஒதுக்கியுள்ளது. மேலும் விழாக்கள், மக்கள் அதிகம் எங்கும் கூடாமலும் பார்த்துக்கொண்டுள்ளது. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழு சோதனை செய்யப்பட பிறகே கேரளவிற்குள் அனுமதிக்கபப்டுகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பள்ளியில் அளிக்கப்படும் இலவச மதிய உணவினை நம்பியுள்ள குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமல் போகும் என எண்ணிய அரசு, மத்திய உணவிற்கு பதிவு செய்துள்ள குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவு கொடுக்குமாறு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் அரசு அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளிகளில் சத்துணவு சமைத்து குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவளித்து வருகின்றனர்.
பாலக்காடு, திருவன்தபுரம் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று உணவளிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. கேரளா கம்யூனிஸ்ட் அரசின் இந்த செயலானது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments