கொரோனா.. பள்ளி விடுமுறையானாலும் மதிய உணவு வீடுகளுக்குச் செல்லும்..! கலக்கும் கேரள கம்யூனிஸ அரசு.

  • IndiaGlitz, [Friday,March 13 2020]

சீனா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா உட்பட 123 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலுமுள்ளது. இந்தியாவில் இதுவரை 75 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இந்த எண்ணிக்கையானது 17 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் உள்ள கம்யூனிஸ்ட் அரசானது பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31வரை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 150 கொடியை ஒதுக்கியுள்ளது. மேலும் விழாக்கள், மக்கள் அதிகம் எங்கும் கூடாமலும் பார்த்துக்கொண்டுள்ளது. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழு சோதனை செய்யப்பட பிறகே கேரளவிற்குள் அனுமதிக்கபப்டுகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பள்ளியில் அளிக்கப்படும் இலவச மதிய உணவினை நம்பியுள்ள குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமல் போகும் என எண்ணிய அரசு, மத்திய உணவிற்கு பதிவு செய்துள்ள குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவு கொடுக்குமாறு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் அரசு அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளிகளில் சத்துணவு சமைத்து குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவளித்து வருகின்றனர்.

பாலக்காடு, திருவன்தபுரம் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று உணவளிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. கேரளா கம்யூனிஸ்ட் அரசின் இந்த செயலானது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
 

More News

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் அடுத்த அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம் 

சூர்யா நடித்து முடித்துள்ள 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்களை அவ்வப்போது படக்குழுவினர் மற்றும்

'பிகில்' நடிகையுடன் கவின் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் கவின். இவர் தனது சக போட்டியாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக

இது பெரியார் மண் அல்ல, பெருந்தன்மை உள்ளவர்களின் மண்: அஜித், விஜய் பட இயக்குனர் 

அஜித் நடித்த 'திருப்பதி', விஜய் நடித்த 'சிவகாசி', திருப்பாச்சி' போன்ற பல இடங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு. விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இவரது பெயரும்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகள் கூட பாதிக்கப்படுவதாகவும்,

உஷார் மக்களே..! ஆக்சிஸ் வங்கியிலிருந்த அரசு கணக்கை மூடியுள்ளது மஹாராஷ்டிரா அரசு.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அரசானது தனது அரசு கணக்கினை ஆக்சிஸ் வங்கியிலிருந்து எஸ்.பி.ஐ வங்கிக்கு மாற்றியுள்ளது.