25 வருடங்களுக்குப்பின் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்ட ரூ.1.30 கோடி நஷ்டஈடு!!! பரப்பான பின்னணி!!!

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

 

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு நஷ்ட ஈட்டுத்தொகையாக ரூ.1.30 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அதைத்தவிர தற்போது உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி ரூ.50 லட்சம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி ரூ. 10 லட்சமும் சேர்ந்து வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞான அமைப்பின் தகவல்களைத் திரட்டி ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்று உளவு பார்ப்பதாக கடந்த 1994 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக விஞ்ஞானி நம்பி நாராயணன் தவறுதலாகச் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் நம்பி நாராயணனோடு சேர்த்து 6 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. வழக்கின் பல கட்ட விசாரணைக்குப் பின்னர் நம்பி நாராயணன் மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தன்மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கேரள அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1.30 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனால் அவர் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் முன்வந்தார்.

தற்போது அந்த வழக்கின் இறுதித்தீர்ப்பில் 1.30 கோடி ரூபாயோடு சேர்த்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சத்தை வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேசிய உரிமை ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பில் ரூ.10 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறது. ஆக தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 சோத்து மேலும் 60 லட்சம் வழங்க கேரள அர