இசை ஞானி இளையராஜாவிற்கு கேரள அரசு அறிவித்த புதிய விருது..!

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை இரவு சார்த்தப்படும்போது ஹரிவராசனம் பாடல் ஒலிப்பது வழக்கம். அந்த ஹரிவராசனம் பாடலின் பெயரில் 2012-ம் ஆண்டு முதல் 'ஹரிவராசனம் விருது' வழங்கப்பட்டு வருகிறது. கேரள அரசு சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. ஹரிவராசனம் விருது இசை உலக ஜாம்பவான்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அப்படி விருது வழங்குபவர்களுக்கு சபரிமலையில் இசை கச்சேரி நடத்துவதற்கு அனுமதி வழங்குகிறார்கள்.

சபரிமலையில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் மண்டல மகரவிளக்கு பூஜைகள் தை மாதம் ஒன்றாம் தேதியுடன் நிறைவுபெறும். மகரவிளக்கு தினத்தில் ஹரிவராசனம் விருது வழங்குவது வழக்கம். இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் கேடயம் ஆகியவை வழங்கப்படும்.இதற்கு முன்பு கே.ஜே.யேசுதாஸ், ஜயன், பி.ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், கே.எஸ்.சித்ரா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான விருது பி.சுசீலாவிற்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, இசைஞானி இளையராஜாவிற்கு விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கேரள அரசு ''இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது இசைஞானி இளையராஜாவிற்கு வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தைக்காடு அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் 15-ம் தேதி காலை 9 மணிக்கு சபரிமலை சந்நிதானத்தில் நடக்கும் விழாவில் இசைஞானி இளையராஜாவிற்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.

More News

முதல்முறையாக இணையும் கவுதம்மேனன் மற்றும் விஷ்ணுவிஷால்!

இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்கிய 'குயீன்' என்ற வெப்சீரிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டிடத்தில் மோதி விமானம் விபத்து: 100 பயணிகளின் கதி என்ன?

கஜகஸ்தான் நாட்டில் 100 பேர்களுடன் சென்ற விமானம் ஒன்று கட்டிடம் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

செல்லாத நோட்டை வைத்திருந்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றம்

கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கமலா அம்மாள் என்ற 92 வயது மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ரூ.31,500 சேமித்து வைத்திருந்தார்.

'தளபதி 64' படப்பிடிப்பில் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜய்சேதுபதி!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

இன்ஸ்டாகிராமில் பழகி 11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

இன்ஸ்டாகிராமில் பழகி பதினோராம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது