கேரள தங்கக்கடத்தல் விவகாரம்!!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் கொள்ளைச் சம்பவங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள அரசியலுக்கே உலை வைக்கும் அளவிற்கு தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் பற்றிய தேசிய புலனாய்வு முகமை (NIA) தற்போது பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. கடந்த வாரம் கேரளத்தின் திருவனந்த புரத்தில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அதிகாரிகளின் பெயரில் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது நாட்டையே உலுக்கும் அளவிற்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் செயலரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றும் இதுபோல பல கொள்ளைச் சம்பவங்கள் கேரளத்தில் தொடர்ந்து நடைபெற்றதாகவும் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அதில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் ஸ்வப்னா இதேபோல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்றும் ஒருமுறை 18 கிலோ இன்னொரு முறை 9 கிலோ என மொத்தம் 27 கிலோ தங்கத்தை அவர் கடத்தியிருக்கிறார் என்றும் இந்தத் தங்கம் நகைக்கடைகளுக்கு அனுப்பப் படுவதில்லை என்றும் பல தகவல்களை நீதிமன்றத்தின் முன்னிலையில் NIA தாக்கல் செய்திகிறது. மேலும் தங்கத்தை நகை கடைகளுக்கு அனுப்பாமல் தங்கத்தைக் கடத்தி பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப் பட்டு இருக்கிறது. இதனால் ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பயங்கரவாத கூட்டுச் சதி, பயங்கரவாத நிதித் திரட்டல், பயங்கரவாத செயல், சட்டவிரோத தடுப்பு சட்டம் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப் பட்டள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments