சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்!
- IndiaGlitz, [Thursday,June 20 2019]
சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை என்பதால் சென்னைக்கு குடிநீர் தரும் அனைத்து ஏரிகள் உள்பட நீர்நிலைகள் வறண்டுவிட்டது. பக்கத்து மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்துதான் சென்னை மக்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரும் வறண்டு போய்விட்டதால் பெரும்பாலான வீடுகளில் உள்ள போர்வெல், கிணறுகளிலும் தண்ணீர் இல்லை
இந்த நிலையில் சென்னையின் வரலாறு காணாத வறட்சியை சமாளிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் அலுவலகம் ஒரு கோரிக்கை விடுத்தது. அதில் கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது
தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜனய் உடனே கேரள அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவில் திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இப்போதைக்கு சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் என்பதால் சென்னை மக்கள் கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.,