கியர் போட்ட கல்லூரி மாணவிகள்: சஸ்பெண்ட் ஆன பேருந்து டிரைவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் அரசு பேருந்து ஒன்று கொண்டிருந்த அந்த பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் ஒருவர் கல்லூரி மாணவிகளுக்கு கியர் போட கற்றுக் கொடுத்ததை அடுத்து அவரது லைசென்ஸ் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் ஷாஜி என்பவர் வயநாடு பகுதியில் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேருந்து ஒட்டிக் கொண்டிருந்த போது அவரது அருகில் இரண்டு கல்லூரி மாணவிகள் உட்கார்ந்துகொண்டு கியர் போட கற்றுக் கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து அவர் பேருந்தை ஓட்டிக்கொண்டே அந்த கல்லூரி மாணவிகளுக்கு கியர் போட்ட கற்று கொடுத்தார். கல்லூரி மாணவிகள் கியர் போட டிரைவர் ஓட்டிக்கொண்டிருக்க, அதில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து இதுகுறித்து போக்குவரத்து வட்டார அலுவலக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து டிரைவர் ஷாஜியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். இதுகுறித்த விசாரணைக்கு பின்னர் அவரது டிரைவிங் லைசென்ஸ் ஆறுமாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அதுமட்டுமின்றி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பயணிகளுக்கு ஆபத்தானதாக முடியும் என்றும், இவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout