டிஜிபியிடம் பாராட்டு பெற்ற தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,February 03 2018]

தமிழ், மற்றும் மலையாள திரைப்பட்ங்களில் நடித்து வரும் நடிகை சனுஷா, சமீபத்தில் ரயிலில் சென்றபோது சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். பின்னர் பாலியல் தொல்லை செய்த அந்த நபரை ரயில்வே போலிசாரிடம் பிடித்து கொடுத்து அவர் மீது புகாரும் அளித்தார்.

ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது சக பயணிகள் பெரும்பாலானோர் தனக்கு உதவிக்கு வராத நிலையிலும் தைரியமாக தன்னை பாலியல் தொல்லை செய்த நபரை போலீஸ் வரும்வரை பிடித்து வைத்திருந்த நடிகை சனுஷாவின் தைரியத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கேரள டிஜிபி, நடிகை சனுஷாவை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். ரயிலில் அவர் நடந்து கொண்ட விதம் மற்றவர்களுக்கு இதேபோன்ற பிரச்சனையில் சிக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததாக அவர் கூறினார்.