கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் - மாநில பேரிடர் அறிவிப்பு

 

கேரளாவில் அடுத்தடுத்து 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசு “மாநில பேரிடர்” அவசர நிலையை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு “மக்களை பயமுறுத்துவதற்காக அல்ல. வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவும்” என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.  மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதனைத் தெரிந்து கொள்ள மருத்துவ மனைகளில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் படும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, சீனாவின் வுஹான் மாநிலத்தில் இருந்து திரும்பிய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப் பட்ட நிலையில் கேரளாவில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கேரளாவில்  வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிப்படும் 140 நபர்களின் ரத்த மாதிரிகள்  சேகரிக்கப்  பட்டு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன. அதில் 46 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்றும் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் முடிவுகள் வந்துள்ளன. மேலும் எஞ்சிய நபர்கள் மருத்துவ முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

நேற்று கேரளாவில் 3 வது  நபருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப் பட்டவுடன் அம்மாநில சுகாதாரத் துறை நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா மக்கள் “பீதியடைய வேண்டாம், மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தலைமையிலான கண்காணிப்பு குழு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என நம்பிக்கை அளித்தார்.

கேரளாவில் காசராகோடு மாவட்டத்தின் வடக்கு, திரிசூர், ஆலப்புழா என்று மூன்று இடங்களில் வைரஸ் தொற்றினால் 3 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் முதலில் பாதிக்கப் பட்ட பெண்மணியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், நோய் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகித்து கேரள சுகாதாரத் துறை 80 நபர்களை கடுமையான பாதுகாப்புடன் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், 2000 க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டு கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சீனாவில் இருந்து கேரளாவுக்குத் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

More News

2019ல் ஒரு லட்சம் கோடி வருமானம் பெற்ற நிறுவனம் எது தெரியுமா?

உலகின் முன்னணி வீடியோ இணையதளங்களில் ஒன்று யூடியூப் என்பது அனைவரும் அறிந்ததே

ஹிந்தியில் ரீமேக் ஆகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் படம்: அதிகாரப்பூர்வ தகவல் 

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் விஜய்யின் 'பிகில்' திரைப்படத்துடன் வெளியான போதிலும்

'மாஸ்டர்' பட அப்டேட்: லோடிங் ஆகிக் கொண்டிருக்கும் அனிருத்தின் 'சம்பவம்'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஏன்யா இப்படியெல்லாம் கிளப்புறீங்க: 'மாஸ்டர்' சாந்தனு புலம்பல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'மாஸ்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த

போனிகபூரின் அடுத்த தமிழ்ப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று