தேசத்துரோக வழக்கு: நடிகை ஆயிஷாவுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையாள தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்ற நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரமுகர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து தான் தேசத்துக்கு எதிராக எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றும் லட்சத்தீவுக்கு பொறுப்பாளராக சென்ற பிரபுல் பட்டேல் குறித்து தனிப்பட்ட முறையில் தான் விமர்சனம் செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை ஆயிஷா சுல்தான் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது காவல்துறையினர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments