144 தடை உத்தரவு போட தயங்க மாட்டேன்: முதல்வர் எச்சரிக்கையால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் கேரளா முக்கிய மாநிலமாக உள்ளது. கேரள மாநிலத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்தே கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது
நேற்று முன்தினம் வரை கேரளாவில் 28 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்ததால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40ஆகஉயர்ந்தது
இந்த நிலையில் நேற்றைப் போலவே இன்றும் 12 பேர்களுக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதனை கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் உறுதி செய்துள்ளார்
ஏற்கனவே கேரளா அரசு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் தினமும் 12 பேர்களுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி கேரளா அரசின் உத்தரவை மீறி அதிகமான மக்கள் கூடும் நிகழ்வுகள் நடக்கின்றன என்றும் இது மேலும் தொடர்ந்தால் 144 தடை உத்தரவை பிறப்பிக்க அரசு தயங்காது என்றும் அவர் அறிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments