வெளிமாநில தொழிலாளர்களை தூண்டிவிடும் போலி போராளிகள்: முதல்வர் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் முதலமைச்சர், அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இரவு பகல் பாராமல் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென கேரளாவில் உள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கோதுமை மாவு, உருளைக்கிழங்கு பருப்பு என அனைத்தும் வழங்கப்பட்டு அவர்கள் கேரள அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இந்த போராட்டம் நடந்தது கேரள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில போலி போராளிகள் இந்த போராட்டத்தை தூண்டி உள்ளதாகவும் கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பிடிக்காத சிலர் தான் இதனை தூண்டி விட்டதாகவும் வாட்ஸ்அப் மூலம் வெளிமாநில தொழிலாளர்களைப் ஒரே இடத்திற்கு வரவழைத்து போராட்டம் செய்ய தூண்டப்பட்டுள்ளதாகவும் போலீசார்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த போராட்டத்தின் பின்னணியில் போலி போராளிகள் இருப்பதாகவும் இது குறித்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளார் இந்த நிலையில் தொழிலாளர்களை போராட்டம் செய்யத் தூண்டி விட்டதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout