ஏழை மாணவியின் எம்பிபிஎஸ் சீட்டுக்கு நேரடியாக தலையிட்ட கேரள முதல்வர்
Send us your feedback to audioarticles@vaarta.com
1176 மதிப்பெண்கள் எடுத்து உயிரையும் கொடுத்த நிலையில் ஏழை மாணவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்காத முதல்வர் மத்தியில் ஏழை மாணவி ஒருவருக்கு சீட் கிடைக்க தானே முன்வந்து உறுதி மொழி கொடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கேரளாவை சேர்ந்த ஏழை மாணவி ரேவதி என்பவருக்கு சென்னை அசோக் நகரில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் நீட் மூலம் இடம் கிடைத்திருந்தது. நேற்றுதான் கல்லூரியில் சேர கடைசி நாள் என்ற நிலையில் அவரிடம் இரண்டு சான்றிதழ்கள் இல்லை. ரேவதியின் பெற்றோர் பின்னர் சமர்ப்பித்தாக கூறியும் அதிகாரிகள் ஏற்று கொள்ளவில்லை.
இந்த நிலையில் ரேவதியின் படிப்புக்கு உதவி செய்த கேரள மாநில முந்திரி உற்பத்தி நிறுவனத் தலைவர் ஜெயமோகன் என்பவரிடம் நிலைமையை ரேவதியின் பெற்றோர் விளக்கினர். அவர் உடனடியாக முதலமைச்சர் பினராயி விஜயனின் கவனத்து கொண்டு சென்றார். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தானே மருத்துவ கல்லூரியை தொடர்பு கொண்டு வரும் 4ஆம் தேதிக்குள் தேவையான சான்றிதழை அனுப்புவதாக உறுதி அளித்தார். இதன் மூலம் ரேவதியின் மெடிக்கல் சீட் உறுதியாகியது.
ஒரு மாநிலத்திற்கு பொறுப்பு கவர்னர் நியமனம் செய்யப்படுவது போல, தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக பினராயி விஜயன் அவர்களையே நியமித்தால் என்ன? கமல்ஹாசன் சரியான நபரிடம் தான் அரசியல் பாடம் கற்று வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com