ஊரடங்கு நேரத்தில் நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்: பிரபலங்கல் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணா என்பவரின் திருமணம் மிக எளிமையாக முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் வெகு சில உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளும் ஐடி தொழிலதிபருமான வீணா என்பவருக்கும் முகமது ரியாஸ் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் வெகு எளிமையாக முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது. முகமது ரியாஸ் மணமகள் கழுத்தில் தாலி கட்டியபோது சுற்றிலும் இருந்தவர்கள் கைதட்டி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முகமது ரியாஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதும், மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டவர் என்பதும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெறும் 800 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் முதல்வரின் மகள் மற்றும் மருமகனுக்கு கேரள அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments