மீனவ ஹீரோக்களுக்காக முதல்வர் பினராயி விஜயனின் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,August 20 2018]
கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அம்மாநிலமே கிட்டத்தட்ட வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மத்திய, மாநில அரசுகளின் மீட்புப்படைகள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தாலும் மீட்புப்பணியில் கேரள மாநில மீனவர்களின் பங்கு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
தன்னலம் கருதாது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளை மீட்புப்பணிக்கு அளித்துள்ளனர். மேலும் பல மீனவர்களும் மீட்புபணியில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மீட்புப்பணிக்காக மீனவர்கள் கொடுத்த ஒவ்வொரு படகிற்கும் ரூ.3000 தினமும் வழங்கப்படும் என்றும், மீனவர்களின் படகுகள் பழுதடைந்தால் அரசு செலவில் பழுதுநீக்கி தரப்படும் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் கூட அலட்சியம் காட்டி வரும் அரசுகளின் மத்தியில் மீனவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் காட்டும் இந்த சலுகை போற்றப்படும் வகையில் உள்ளது.