கேரள விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்ட 22 பேருக்கு கொரோனா!!! அதிர்ச்சித் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆகஸ்ட் 7 ஆம் தேதி துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு 184 பயணிகளுடன் வந்த ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாலை 7.30 மணிக்கு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்திய விமானம் கனமழை காரணமாக வழுக்கி அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் கரிப்பூர் பகுதியின் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
கொரோனா காலத்தைப் பொறுப்படுத்தாமல் அதிகாரிகள் செயல்பட்டதால் பலர் உயிர்பிழைத்த சம்பவங்களும் நடந்தது. ஐக்கிய அரபு எமிரேட்டிஸ்ஸின் துபாயில் இருந்து இந்த விமானம் கேரளாவின் கோழிக்கோடுக்கு வந்ததால் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்றே செய்தி வெளியிட்டு இருந்தார். அதன்படி மீட்கப்பட்ட பயணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு முறையான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது விமான விபத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் தென்மேற்கு பருவமழை, கொரோனா பரவல் விகிதத்தைப் பொறுத்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கேரளாவில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் என்று தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout