4700 பேர்களில் ஸ்ரீதேவியும் ஒருவர்! எப்படி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனியன்று துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் இன்று அவரது உடல் லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் துபாயில் காலமான ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டதால் அவரது உடல் இந்தியா வர மூன்று நாட்கள் ஆகியுள்ளது.
துபாய் நாட்டின் சட்டப்பட்டி அங்கு சுற்றுலா செல்பவர்கள் மரணம் அடைந்துவிட்டால் அந்நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் கையெழுத்திட்டால் மட்டுமே அவரது சொந்த நாட்டிற்கு உடலை எடுத்து செல்ல முடியும். அந்த வகையில் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வருவதற்கு கையெழுத்திட்டவர் அஷ்ரப் என்ற கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்ரீதேவியின் அனைத்து ஆவணங்களிலும் தானே முன்வந்து எந்தவித பிரதிபலனும் பாராமல் கையெழுத்திட்டு அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்ல உதவியுள்ளார்.
ஸ்ரீதேவி ஒரு பிரபலம் என்பதற்காக அவர் இதனை செய்யவில்லை. ஏழை, எளியோர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்துள்ளார். இதுவரை அவர் 4700 உடல்களை 38 நாடுகளுக்கு கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அந்த 4700 பேர்களில் ஒருவர்தான் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com