மே 16 வரை முழு ஊரடங்கு… உத்தரவு பிறப்பித்த கேரள முதல்வர்!
- IndiaGlitz, [Thursday,May 06 2021]
கேரளாவில் மே 8 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை வெளியிட்டு உள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடைபெற்று முடிந்த கேரளச் சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றிப் பெற்று கேரளாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து உள்ளார் பினராயி விஜயன். இந்த வெற்றிக் குறித்து பேசிய அவர் தேர்தலில் வெற்றிப் பெற்றது பெரிய விஷயம் அல்ல. தற்போது நம் கண்முன் உள்ள பெரிய சவால் கொரோனா வைரஸ் பரவல்தான் எனக் கூறியிருந்தார்.
இதனால் கொரோனா பரவல் உள்ள நிலையில் பதவியேற்பு விழாவையும் தள்ளி வைத்துள்ள பினராயி விஜயன் தற்போது கேரளாவில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்திலும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மருத்துவக் குழு சார்பில் நேற்று கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகத் த
கவல் வெளியானது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கை தட்டுப்பாடு போன்றவை நிலவுவதாகவும் இதனால் நிலைமையை சமாளிக்க முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய கொரோனா விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
As directed by the CM, the entire State of Kerala will be under lockdown from 6am on 8 May to 16 May. This is in the background of a strong 2nd wave of #COVID19.
— CMO Kerala (@CMOKerala) May 6, 2021