ஊரடங்கில் விவசாயம் கற்று கொண்ட 'அன்பிற்கினியாள்': வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான ‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் தான் விவசாயம் கற்றுக்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். இந்த ஊரடங்கில் நான் விவசாயம் கற்றுக் கொண்டேன் என்றும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததற்கு இயற்கைக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்கதிர்களை கையில் வைத்திருப்பது போன்றும், வயலில் கதிர் அறுப்பதுமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்
சமீபத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் எப்போதும் விரும்பும் விவசாயத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளதாகவும் கீர்த்தி பாண்டியன் இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி பாண்டியன் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
— Keerthi Pandian (@iKeerthiPandian) May 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com