எந்த நட்சத்திரத்தைப் போல் கணவர் அமைய வேண்டும்?- கீர்த்தி சுரேஷ் பதில்

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

நடிகை கீர்த்தி சுரேஷ் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருவது தெரிந்ததே. குறிப்பாக அவர் விஜய்யுடன் 'பைரவா' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களில் நடித்த பின்னர் அவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். இவருடன் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமீபத்தில் வெளியான இந்த நிகழ்ச்சியின் புரமோவில் கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவர் யார் போல் இருக்க வேண்டும் என்று ஒரு எட்டு நடிகர்களின் படங்கள் காட்டப்பட்டது. அதில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்பட அந்த லிஸ்ட்டில் 8 பேர்களின் புகைப்படங்கள் இருந்தது. இதில் தன்னுடைய வருங்கால கணவர் தளபதி விஜய் மற்றும் விக்ரம் போல் இருக்க வேண்டும் என்று கீர்த்திசுரேஷ் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சி வரும் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாகவுள்ளது.

More News

மும்பை மாரத்தானில் கலந்து கொள்ளும் அஜித்-விஜய் நாயகி

இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் மும்பையில் வரும் ஜனவரி 20ஆம் தேதி மெகா மாரத்தான் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.

'பேட்ட', 'விஸ்வாசம்' ரிலீஸ் நாளில் ஐஸ்வர்யா ராஜேஷின் கனெக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

நடிகை மடோனாவின் காதலர் ஒரு இசையமைப்பாளரா?

'பிரேமம்' படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன்,

'தளபதி 63' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டாரா விஜய்?

'சர்கார்' படத்திற்கு பின் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வருகிறார்.

சீமான் - சிம்பு இணையும் புதிய படம் குறித்த தகவல்

இயக்குனரும் நடிகருமான சீமான் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பிசியாக இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் குறைத்து கொண்டார்.