இளைஞர்களுக்கு கீர்த்திசுரேஷின் பணிவான வேண்டுகோள்

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து கோலிவுட் நடிகர்கள் பலர் கருத்து கூறி வந்தாலும் நடிகைகளில் ஒருசிலர் மட்டுமே இதுகுறித்து கருத்து கூறியுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆழ்ந்த இரங்கலை அனிதா குடும்பத்தினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அனிதா என்னவாக ஆக நினைத்தாரோ, அவருடைய கனவு எதுவோ அதை இனிமேல் எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. ஒரு எதிர்கால மேதாவியை, நல்ல நல்ல உள்ளம் கொண்ட பெண்ணை, பெண்ணினத்தின் சக்தியை இழந்துவிட்டோம். அவருக்காக ஆழ்ந்த வருத்தமடைகிறேன்

இளைஞர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். ஒரு உயிரை மாய்த்து கொள்வது ஒரு பிரச்சனைக்கு தீர்வாகாது. இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

More News

நீட் ஆதரவு தாய் தற்கொலையின் போது எங்கே போனீர்கள்? எச்.ராஜா

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்த பின்னர் தனது மருத்துவ படிப்பு என்ற கனவு முற்றிலும் கலைந்ததை தாங்க முடியாமல்தான் நேற்று மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த அரசு யாருக்கான அரசு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பா.ரஞ்சித்

மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவுக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதை பார்த்தோம், இந்த நிலையில் இன்று 'கபாலி', 'காலா' இயக்குனர் ரஞ்சித் அனிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை &

ஏழை மாணவியின் எம்பிபிஎஸ் சீட்டுக்கு நேரடியாக தலையிட்ட கேரள முதல்வர்

1176 மதிப்பெண்கள் எடுத்து உயிரையும் கொடுத்த நிலையில் ஏழை மாணவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்காத முதல்வர் மத்தியில் ஏழை மாணவி ஒருவருக்கு சீட் கிடைக்க தானே முன்வந்து உறுதி மொழி கொடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்...

இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். அனிதா குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஆவேசமாக கண்டனக்குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுகுறித்து பேசுகிறார்...

முதல்வர் அறிக்கையில் 'நீட்'டும் இல்லை, நீதியும் இல்லை: நெட்டிசன்கள் கருத்து

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய அனிதா நேற்று பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்....