சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய்-விக்ரம் நாயகி

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

நடிகர் சிம்பு தற்போது ஒரே நேரத்தில் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' மற்றும் சுந்தர் சியின் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவற்றில் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க சில முன்னணி நடிகைகள் பரிசீலனையில் இருந்தனர். இறுதியில் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது தளபதி விஜய்யின் 'சர்கார்', விக்ரமின் 'சாமி 2', விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

மேலும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார். வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.