'சாவித்ரி' படத்திற்காக கீர்த்திசுரேஷ் செய்யும் தியாகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஸ்டில்களில் இருந்து சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் எந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தினார் என்பதை பார்க்க முடிந்தது.
அதுமட்டுமின்றி சாவித்ரி முன்னணி நடிகையாக இருந்தபோதே உடல் எடை சற்று அதிகரித்து குண்டாக இருந்தவர். அதேபோல் கீர்த்திசுரேஷூம் கேரக்டரின் இயல்பு தன்மை மாறாமல் இருக்க உடல் எடையை அதிகரித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் கேரக்டருக்காக தனது உடல் எடையை அதிகரித்து தியாகம் செய்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் அவர் மீண்டும் பழைய உடல் எடைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துல்கர் சல்மான், சமந்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com