என்னுடைய இதயத்தை வென்றவர்கள்: கீர்த்திசுரேஷின் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி உலக கலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இந்த தினத்தில் உலகிலுள்ள ஓவிய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை ஆர்ட் மூலம் ரசிகர்கள் வரைந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த ஓவியங்கள் அச்சுஅசலாக இருப்பதை அறிந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஓவியங்களை வரைந்த ஓவியர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் ’என்னுடைய இதயத்தை வென்ற ஓவியர்கள்’ என்ற தலைப்பில் குறிப்பிட்டு, ரசிகர்கள் வரைந்த ஓவியங்களின் தொகுப்புகளை அவர் அதில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய புகைப்படத்தை வரைந்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’அண்ணாத்த’ செல்வராகவனுடன் ’சாணிக்காகிதம் உள்பட்ட சில திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments