செப்டம்பரில் கீர்த்திசுரேஷ் வீட்டில் டும்டும் மேளம்

  • IndiaGlitz, [Friday,August 19 2016]

கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்ட நடிகை கீர்த்திசுரேஷ், சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ' படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது 'விஜய் 60' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் சூர்யாவின் அடுத்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கீர்த்திசுரேஷ் வீடு தற்போது கல்யாண களையுடன் உள்ளது. கீர்த்திசுரேஷின் உடன்பிறந்த சகோதரி ரேவதி சுரேஷுக்குத்தான் திருமணம்,. வரும் செப்டம்பர் 8ஆம் தேதி குருவாயூர் கோவிலில் திருமணம், என்றும், செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கீர்த்திசுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷூம் திரையுலகில் பணிபுரிபவர்தான். அவர் விஷுவல் எஃபெக்ட் கலைஞராக பல படங்களில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்துக்கு கிடைத்த ஹாலிவுட் பட்டம்

அஜித்துக்கு பட்டம், பதவி, அடைமொழி ஆகியவற்றில் விருப்பம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே...

ஆஸ்திரியாவின் தலைப்பு செய்தியில் 'அஜித் 57'

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரியா நாட்டின் ஊடகம் ஒன்று இந்த படத்தின் செய்திகளை வெளியிட்டுள்ளது...

'கொடி' ரிலீஸ் தேதி. தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் தற்போது 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று...

தனுஷின் 'கொடி' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும்...

ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வரும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்கனவே...