தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்: பிரியங்கா ரெட்டி கொலை குறித்து பிரபல நடிகை 

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கிய உள்ளது. இதுகுறித்து திரையுலக பிரபலங்கள் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பாக அமையும்’ என்று ஆதங்கத்துடன் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்: அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மனம் நொறுங்கிவிட்டது.

ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார் மீது பழி சொல்வது என்பதும் தெரியவில்லை. ஹைதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும்.

கொடூர கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மனமார்ந்த இரங்கலை அந்தக் குடும்பத்துக்கு உரித்தாக்குகிறேன். இதனைத் தாங்கும் சக்தியை இறைவன் தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நான் கர்மாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்

இவ்வாறு கீர்த்திசுரேஷ் கூறியுள்ளார்
 

More News

3 மாஸ் சேர்ந்ததால் 'தெறி மாஸ்' ஆகிருச்சு: 'தலைவர் 168' குறித்து பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தலைவர் 168' திரைப்படத்தின்

வெற்றிடம் இருப்பது உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன்: நடிகர் விவேக்

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பிறர் மனதை புண்படுத்தாத வகையில் உண்மையான நகைச்சுவை காட்சிகள் இருந்தன. ஆனால் தற்போது உருவத்தை கேலி

சென்னை தொழிலதிபராக மாறிய மணிரத்னம் பட நாயகி!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய 'காற்று வெளியிடை' என்ற படத்தின் நாயகியாகவும் அதன் பின்னர் அவர் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில்

 ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிக்பாஸ் நடிகையின் 'த்ரில்' படம்

விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இருமலுக்கு நரம்பு ஊசியா? பட்டதாரி இளம்பெண் பரிதாப மரணம்

சாதாரண இருமல் மற்றும் வாந்திக்கு நரம்பு ஊசி போட்டதால் பெண் பட்டதாரி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது