தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்: பிரியங்கா ரெட்டி கொலை குறித்து பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கிய உள்ளது. இதுகுறித்து திரையுலக பிரபலங்கள் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பாக அமையும்’ என்று ஆதங்கத்துடன் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்: அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மனம் நொறுங்கிவிட்டது.
ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார் மீது பழி சொல்வது என்பதும் தெரியவில்லை. ஹைதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும்.
கொடூர கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மனமார்ந்த இரங்கலை அந்தக் குடும்பத்துக்கு உரித்தாக்குகிறேன். இதனைத் தாங்கும் சக்தியை இறைவன் தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நான் கர்மாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்
இவ்வாறு கீர்த்திசுரேஷ் கூறியுள்ளார்
#RIPPriyankaReddy #JusticeForPriyankaReddy pic.twitter.com/9vCKsbsj1O
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments