கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

கடந்த 2018 ஆம் ஆண்டு சர்கார் உள்ளிட்ட 6 திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த ஆண்டு அவருக்கு ரஜினியுடன் நடித்து வரும் ’தலைவர் 168’ உள்பட ஓரிரு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தில் ஆர்ச்சா என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ’Marakkar Arabikadalinte Simham’ என்ற டைட்டில் கொண்ட இந்த படம் வரும் மார்ச் 26ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பெங்குயின்’ உள்பட கீர்த்தி சுரேஷ் மேலும் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி மிஸ் செய்த படத்தில் நடித்த அஜித்: மனம் திறந்த கே.எஸ்.ரவிகுமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த ஒரு திரைப்படத்தில் அஜித் நடித்த தகவலை பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 24 ரிலீஸ் பட்டியலில் இணைந்த 3வது படம்!

கடந்த பொங்கல் பண்டிகையின்போது வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படமும் தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படமும்

ரஜினிகாந்த் இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்: ஹெச்.ராஜா

ரஜினிகாந்த் அவர்கள் எந்த மிரட்டலுக்கும் சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இடையே அவர் 'ஜனகணமன'

ஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்

ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இதுவரை உலகில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை பெற்றுள்ள நிலையில்