'நடிகையர் திலகம்' பாணியில் மீண்டும் ஒரு கீர்த்திசுரேஷ் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், விக்ரம், தனுஷ், விஷால் என குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும், அவருக்கு பெரும் புகழ் பெற்று தந்த படம் 'நடிகையர் திலகம்'. இந்த நிலையில் இதேபோன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் கீர்த்திசுரேஷ் மீண்டும் நடிக்கவுள்ளார்.
கீர்த்திசுரேஷின் 20வது படமாக அமையும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் மகேஷ் கொனரு இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தா படத்திற்கு டேனி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் கீர்த்தியின் 'நடிகையர் திலகம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவொரு குடும்பக்கதை என்றும், கீர்த்தியின் கேரக்டரை சுற்றியே படத்தின் முழுக்கதையும் நகரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். பிப்ரவரி 10ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் தொடங்கவுள்ளது. அதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுவ் வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments