கீர்த்திசுரேஷின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Tuesday,October 18 2016]

'ரெமொ', 'பைரவா' நாயகி கீர்த்திசுரேஷ், முன்னாள் நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததுதான். கடந்த 80களில் சிவாஜிகணேசனுடன் 'கீழ்வானம் சிவக்கும்'
ரஜினியுடன் 'நெற்றிக்கண்', விஜயகாந்துடன் 'ஓம்சக்தி', உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர்.
இந்நிலையில் மகள் கீர்த்திசுரேஷ் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மேனகா மீண்டும் தற்போது ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். பிரபல நடிகர், இயக்குனர் பிரதாப் போத்தனுடன் அவர் தற்போது ஒரு குறும்படத்தில் நடித்து வருகிறார்.
IMA' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த குறும்படத்தில் பிரதாப்போத்தன், மேனகா ஆகிய இருவருக்குமே மிகச்சிறந்த கேரக்டர்கள் என்றும் இந்த குறும்படத்திற்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து மேனகா மீண்டும் வெள்ளித்திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.