8வது உலக அதிசயம் நீங்கள்தான்: தேசிய விருது பெற்ற நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

  • IndiaGlitz, [Thursday,August 18 2022]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் எட்டாவது உலக அதிசயம் என கமெண்ட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பின்னர் இவர் விஜய்யின் ’பைரவா’ தனுஷின் ’தொடரி’ ரஜினியின் ’அண்ணாத்த’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, விக்ரமின் ‘சாமி 2’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். மேலும் ‘நடிகையர் திலகம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது உதயநிதி நடித்து வரும் ’மாமன்னன்’ உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகையாக உள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும்

அந்த வகையில் சற்றுமுன் மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு சுமார் 7 லட்சம் லைக்ஸ் பதிவாகியுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் ஒரு ரசிகர் ’நான் இதுவரை ஏழு உலக அதிசயங்கள் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள் எட்டாவது உலக அதிசயம்’ என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ரயிலில் கார்டு ஆக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சும்மாவே கிளாமர் தூக்கலா இருக்கும், பிகினியில கேக்கணுமா? யாஷிகாவின் வைரல் வீடியோ!

 தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

விருமனி'ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு

கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின்

'வெந்து தணிந்தது காடு' ஆடியோ விழாவில் இத்தனை பிரமாண்டமா?

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'ராக்கெட்டரி' படத்தால் சொந்த வீட்டை இழந்தாரா மாதவன்?

மாதவன் நடித்து இயக்கிய 'ராக்கெட்டரி' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெள்ளை கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.