'தலைவர் 168' படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்திசுரேஷுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 168’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, சூரி உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். அவர் சமீபத்தில் ’நடிகையர் திலகம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் என்பதும் அந்த விருது அவருக்கு நேற்று துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அவர்களால் வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இதனை அடுத்து தேசிய விருது வாங்கிய பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ’தலைவர் 168’ படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்ததோடு கேக் வெட்டி இந்த நிகழ்வை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிகாந்த் கேக் ஊட்டினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகாவும் ரஜினிகாந்த்தும் கடந்த ஆண்டு 1981ஆம் வெளிவந்த நெற்றிக்கண் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும், தற்போது மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு மகளாக தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Team #Thalaivar168 congratulates @KeerthyOfficial for winning the National Award for Best Actress.#66thnationalfilmawards pic.twitter.com/z93EQ22fST
— Sun Pictures (@sunpictures) December 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com